தலைப்புச் செய்திகள்

பகிடிவதைக்கு ஆளான தொழில்நுட்பக் கல்லூரி மாணவி, தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டார்

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவி, கடுமையான பகிடிவதைக்க ஆளாகி – ஏரியில் குதித்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

தற்போது மாணவி சிகிச்சைக்காக குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரியில் தான் கடுமையான பகிடிவதைக்கம் துஷ்பிரயோகத்துக்கும் ஆளானதால். அவர் இந்த முடிவுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கல்லூரியில் உள்ளக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.