
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். டொக்டர் திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவை அடுத்து – இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் உதயங்க ஹேமபால முன்னர் வலுசக்தி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பேராசிரியராகவும் பீடாதிபதியாகவும் பதவி வகித்தார்.
இலங்கை மின்சார சபையின் தலைவராக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்ட டொக்டர் சியம்பலாபிட்டிய கடந்த மே மாதம் ராஜினாமா செய்தார்.



