தலைப்புச் செய்திகள்

பிரமர் பதவியில் எந்த மாற்றமும் கிடையாது: அமைச்சரவை பேச்சாளர் திட்டவட்டம்

பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி அமரசூரியவை மாற்றுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசும் போது – அவர் இதனைக் கூறினார். மேலும் தற்போதைய அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்திகளையும் அவர் நிராகரித்தார்.

சில தரப்பினர் கூறுகின்றமை போல், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக எந்த முடிவும் அல்லது விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற பேச்சுக்கள் – சுயநலம் கொண்ட பிரிவினரால் பரப்பப்படுவதாகtம் அவர் தெரிவித்தார்.