
பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ் செய்திகளுக்கு 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுவதை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
முந்தைய ஜனாதிபதிகளின் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இலவசமாக அனுப்பப்பட்டதாக – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தைச் சேர்ந்த டினுக் கொலம்பகே கூறியுள்ளார்.
‘இது தொலைத்தொடர்பு வழங்குநர்களால் வழங்கப்படும் சேவை’ என்று அவர் ‘X’ இல் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், கடந்த ஆண்டு மட்டும், இலங்கை ஜனாதிபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தி செய்தியை அனுப்புவதற்கு 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே, ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.



