தலைப்புச் செய்திகள்

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு: கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்துள்ளார்.

மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (22) இரவு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, டேன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.