தலைப்புச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத் மரணம்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் உயிரிழந்து விட்டதாக பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீதொட்டமுல்லயில் உள்ள – லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இன்று (22) இரவு, டேன் பிரியசாத் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் காயமடைந்த அவர் – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.