தலைப்புச் செய்திகள்

டேன் பிரியசாத் உயிருடன் உள்ளார்: பொலிஸ்

டேன் பிரியசாத் மரணமடைந்ததாக தாம் வெளியிட்ட அறிவிப்பை பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர்

மீதொட்டமுல்லயில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

ஆரம்பத்தில் டேன் பிரியசாத் மரணத்தை உறுதிப்படுத்திய பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்திய போதிலும், பின்னர் டேன் பிரியசாத் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.

மோட்டார் பைக்கில் வந்த இருவர், 39 வயதுடைய டேன் பிரியசாத் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதோடு, தாக்குதலுக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.