தலைப்புச் செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவில், 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதம் 20ஆம் திதி முதல் – தேர்தல் முறைப்பாடுகளுக்கான தேசிய மையம் (National Centre for Election Complaints) மற்றும் மாவட்ட மையம் ஆகியவற்றில் மொத்தம் 2011 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20ஆம் திகதி மாத்திரம், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான 130 சம்பவங்களும், தேர்தல் தொடர்பான ஏழு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.