தலைப்புச் செய்திகள்

தேர்தல் தொடர்பில் 154 முறைப்பாடுகள்: 14 வேட்பாளர்களும் கைது

Complaint (претензия). Печать и оттиск

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பாக மொத்தம் 154 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான ஒரு சம்பவமும் நேற்று (12) பெறப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உள்ளூராட்சித் தேர்தல் 14 வேட்பாளர்களும் 46 அரசியல் கட்சி ஆதரவாளர்களும் இந்த முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மார்ச் 03ஆம் திகதி முதல் 11 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.