தலைப்புச் செய்திகள்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்கான இடைக்காலத் தடை நீக்கம்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) நீக்கியுள்ளது.

மேலும் மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களுக்கென தாக்கல் செய்யப்பட்டு – நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட மா அதிபர் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களின் நிராகரிக்கப்பட்ட 72 வேட்புமனுக்களை (37+35) ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.