தலைப்புச் செய்திகள்

ஹெரோயின், ஐஸ் 700 கிலோகிராம் கடற்படையிடம் சிக்கின

லங்கை கடற்பரப்பில் ​​ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) அடங்கிய 700 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை மேற்கு கடற்கரையில் இன்று (05) நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக – கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.