
மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடம் நடத்தப்பட மாட்டாது என, அமைச்சநர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் 06 மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டமையினால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அவர் விளக்களித்தார்.
பாணந்துறையில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய அவர்; “அரசாங்கம் எல்லா நேரங்களிலும் தேர்தல்களை நடத்த முடியாது. அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு, பிரதான தேர்தல்கள் முடிவடையும். மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளன. சில சட்டங்கள் மாற்றப்பட வேண்டியிருப்பதாலும், நாட்டின் வளர்ச்சிக்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாலும், இந்த ஆண்டு அது நடத்தப்படாது” என்றும் அவர் தெரிவித்தார்.



