தலைப்புச் செய்திகள்

டெய்சி பாட்டி பிணையில் விடுவிப்பு

யோஷித ராஜபக்ஷவின் தாய்வழி பாட்டியான ‘டெய்சி ஆச்சி’ என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட், இன்று (05) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தலா 05 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக, டெய்சி பாட்டி என அறியப்பட்ட டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்கவை, குற்றப் புலனாய்வுத் துறையினர் (சிஐடி) கைது செய்துள்ளனர்.

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி – இன்று (05) சிஐடியிடம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்டதாகவும், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு சொந்தமான 59 மில்லியன் ரூபாய் கூட்டுக் கணக்கு தொடர்பான பணமோசடி சட்டத்தின் கீழ், பெப்ரவரி மாத தொடக்கத்தில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

2016 முதல் நடத்தப்பட்ட விசாரணைகளில் யோஷித ராஜபக்ஷ – நிதி தொடர்பாக திருப்திகரமான விளக்கங்களை வழங்க முடியவில்லை என்று கண்டறியப்பட்டதை அடுத்து, பணமோசடி சட்டத்தின் கீழ் – இருவருக்கும் எதிராக பொலிஸாரும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தனர்.