
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முதற்கட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு தொடங்கியுள்ளது.
இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணைக்குழு வரும் சனிக்கிழமை (08) கொழும்புக்கு அழைத்துள்ளது.
தேர்தல் தொடர்பான இறுதி முடிவு நாளை (06) நடைபெறவுள்ள தேர்தல் ஆணையக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக்கள் கோருவதற்கான அறிவிப்பு வெளியானதையடுத்து, தேர்தல் ஆணைக்குழு நடத்தும் முதல் கூட்டம் இதுவாகும்.
இதேவேளை, தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம், மார்ச் 12 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 17 ஆம் திகதி தொடங்கம் 20ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.



