
சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 7500 ரூபாய் உதவு தொகையை, 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையை 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
அதேபோன்று முதியோருக்கான மாதாந்த உதவு தொகையான 03 ஆயிரம் ரூபாயை, 05 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
இது ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் எனவும அவர் கூறினார்.



