தலைப்புச் செய்திகள்

லஞ்சம் பெற்ற PHI கைது

பொது சுகாதார பரிசோதகர் (PHI) ஒருவர் 02 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுப் பெற்றமை தொடர்பில் நேற்று (15) கலேவலையைில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தம்புள்ளையில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையைப் புதுப்பிப்பதற்காக, மேற்படி பொதுச் சுகாதார பரிசோதகர் லஞ்சம் கேட்டுப் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டார் என, லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைதானவர் கலேவல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பாகமுவையைச் சேர்ந்த ஹோட்டலின் உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டின் அளிக்கப்பட்ட குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ஹோட்டலை பரிசோதனை செய்த பொதுச் சுகாதார பரிசோதகர், ஹோட்டலின் உரிமத்தைப் புதுப்பிப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை அதிகாரிகளுக்கு வழங்கும் பொருட்டு லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.