தலைப்புச் செய்திகள்

இலங்கையின் முன்னாள் எம்.பி, இந்தியாவில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . கே. திலீபன் இந்தியாவிலுள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற திலீபன், அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளார்.

இந்தநிலையில், கேரளா- கொச்சி என்ற இடத்தில் வைத்து அவரை தமிழகப் பொலிஸார் கடந்த திங்கள் கிழமை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் – இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் பாருங்கள்