தலைப்புச் செய்திகள்

சிறுநீரக நோயாளிக்கு ‘நாம் ஊடகர் பேரவை’ உதவி

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நோயாளியொருவருக்கு – நாம் ஊடகர் பேரவை (We Journalists Forum), ஒரு தொகை பணம் மற்றும் உதவிப் பொருட்களை நேற்றைய தினம் வழங்கியது.

வை.எம்.எம்.ஏ அமைப்பிடம் நாம் ஊடகர் பேரவை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கிடைத்த இந்த உதவிகளை, நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ.எல். மப்றூக், செயலாளர் றிசாத் ஏ. காதர், அமைப்பாளர் எம்.ஐ.எம். றியாஸ் (அதிபர்), நிர்வாக குழு உறுப்பினர் கே.ஏ. ஹமீட் மற்றும் வை.எம்.எம்.ஏ அமைப்பின் அட்டாளைச்சேனை பிரதேச தலைவர் எம்.ஐ. ஹாசிம் (பிரதியதிபர்) ஆகியோர் இணைந்து பயனாளிக்கு வழங்கினர்.

கடற்றொழில் செய்து வந்த மேற்படி பயனாளி – இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், வாழ்வாதாரத்துக்கான வருமானங்கள் இன்றி – நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவருக்கு உதவ விரும்புவோர் நாம் ஊடகர் பேரவையின் செயலாளர் றிசாத் ஏ. காதரை 0753981015 எனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

நாம் ஊடகர் பேரவையானது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்கள்