தலைப்புச் செய்திகள்

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட நால்வருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் – இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன → மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக (முன்னர் சபரகமுவ மாகாணம்) மாற்றப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி.எம். குணரத்ன சப்ரகமுவ மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக (முன்னர் மேல் மாகாணம்) இடமாற்றப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.எல். விஜேசேன – நலன்புரிப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக (முன்னர் களுத்துறை பிரிவு) நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜே. பத்மினி -களுத்துறைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்கள்