தலைப்புச் செய்திகள்

மூத்த அரசியல் தலைவைர் மாவை சேனாதிராஜா காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜா தனது 82வது வயதில் காலமானார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (29) காலமானார்.

வீட்டில் இருந்தபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானமையை அடுத்து, சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக 2014 முதல் 2024 வரை பதவி வகித்தார்.

1989 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணியின் தேசியப் பட்டியல் மூலம் முதலாவதாக நாடாளுமன்றம் நுழைந்த அவர்,1999ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணியில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் நுழைந்தார்.

2001 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். தொடர்ந்து 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

இதையும் பாருங்கள்