தலைப்புச் செய்திகள்

பதிவற்ற தொலைபேசிகளைக் கண்டறிய, புதிய மென்பொருள் செயல்படுத்தப்படும்: TRCSL பணிப்பாளர் தெரிவிப்பு

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் (TRCSL) பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசிகளின் பயன்பாட்டைக் கண்டறிந்து தடுப்பதற்கு ஒரு புதிய மென்பொருள் செயல்படுத்தப்படும் என்று, அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத எந்தவொரு கைத்தொலைபேசிகளையும் வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை – தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் பேசிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெனரல் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத்் “எங்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்த கைத்தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை நாங்கள் செயல்படுத்துவோம்” என்று கூறினார்.

“அங்கீகரிக்கப்படாத கைத்தொலைபேசிகளால் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைப்பதும், நாட்டில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பதும் இதன் நோக்கம். அங்கீகரிக்கப்படாத தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக விரோத நடவடிக்கைகளைக் குறைப்பதும், கைத்தொலைபேசிகள் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதை மேலும் வலுப்படுத்துவதும் இதன் நோக்கம்” என்றார்.

சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் சந்தையில் பரவலாகக் கிடைப்பதால், எதிர்காலத்தில் அவற்றகு்க விலைகள் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்கள்