தலைப்புச் செய்திகள்

எட்டு வருடங்களுக்குப் பிறகு வழக்கு: ‘அரசியல் வேட்டை’ என நாமல் குற்றச்சாட்டு

கிரிஷ் ஒப்பந்தந்தத்தில் (Krrish deal) 70 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியல் வேட்டையின்’ ஒரு பகுதியாக இந்தக் குற்றப்பத்திரிகையை நாமல் ராஜபக்ஷ விவரித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைக்கு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தொடர்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் தொடர்பில் நாமல் கேள்வியெழுப்பியுள்ளார்.

“தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அரசியல் வேட்டையைத் தொடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது. எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை உருவாக்குவதன் மூலம், அவர்கள் தங்கள் தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முடியும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நம்புவதாகத் தெரிகிறது,” என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நீதித்துறையில் நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், நியாயமான தீர்பு கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். அதே நேரத்தில் அரசாங்கம் அதன் குறைபாடுகளை மறைக்க இந்த வழக்கைப் பயன்படுத்துவதாகவம் அவர்ட குற்றம் சாட்டினார்.

இதையும் பாருங்கள்