
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தொழில் திணைக்கள அதிகாரி ஒருவரை – லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவனமொன்று ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய வேதனம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்கும், விசாரணைக்காகப் பெறப்பட்ட ஆவணங்களை மீள ஒப்படைப்பதற்கும் 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இந்த அதிகாரி லஞ்சமாக கொரியுள்ளார்.
அதன்படி, கல்கிசை பகுதியில் நேற்று (22) பிற்பகல் லஞ்சமாக கோரிய பணத்தைப் பெற்றுக்கொண்டபோது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக லஞ்ச, ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு கூறியுள்ளது.
சந்தேகநபரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



