தலைப்புச் செய்திகள்

வெளிநாடுகளுக்கான 05 ராஜதந்திரிகள் நியமனம்

வெளிநாடுகளுக்கான ஐந்து ராஜதந்திரிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமதித்துள்ளார்.

அந்த வகையறில், நான்கு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தின் போது இவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜதந்திரிகள் – நியமனங்களை தொடர்ந்து ஜனாதிபதியுடன் சுருக்கமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் பின்வருமாறு:

  • திருமதி ஆர்.எஸ்.கான் அசார்ட் – கத்தாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • டப்ளியூ.ஜி.எஸ். பிரசன்னா – நியூசிலாந்திற்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • திருமதி எஸ்.கே. குணசேகர – ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • எல்.பி. ரத்நாயக்க – குவைத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • ஏ.எஸ்.கே. செனவிரத்ன – எகிப்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்

புதிதாக நியமிக்கப்பட்ட ராஜதந்திரிகள் – இலங்கை வெளிநாட்டு சேவையில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள தொழில் ராஜதந்திரிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.