
முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வர்த்தகருமான சலோச்சன கமகே, 09 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தபோது, புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்துள்ளார்.
இவருடன் மற்றுமொரு வர்த்தகரும் இதன்போது கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் மற்றுமொரு வர்த்தகரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் காணி சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இழப்பீடுகளை விரைவாக வழங்குவதாக உறுதியளித்து, இந்த லஞ்சம் கோரப்பட்டதாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இழப்பீட்டுச் செயற்பாடுகளை இலகுவாக்க எண்ணியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



