தலைப்புச் செய்திகள்

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஹர்ஷ நியமனம்

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (18) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அரசாங்க காலத்திலும் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவியை ஹர்ஷ டி சில்வா வகித்திருந்தார்.