தலைப்புச் செய்திகள்

கேஸ் சிலின்டரின் தேசியப்பட்டியல்: பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டமை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் பைசர் முஸ்தபா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை – தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக முஸ்தபாவை நியமித்துள்ளதாக – அந்தக் கட்சி நேற்று (10) தெரிவித்தது.

இருந்தபோதிலும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபாவை நியமிப்பது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணிக்குள் சர்ச்சை எழுந்துள்ளது.

2024 பொதுத் தேர்தலில் ‘கேஸ் சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்றது.

மற்றைய தேசியப்பட்டியலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் புதிய ஜனநாயக முன்னணிக்குள் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன.