தலைப்புச் செய்திகள்

டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானம்

டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இதற்காக சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் – நேற்று (09) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

தற்போது பயன்பாட்டிலுள்ள ஸ்மார்ட் அட்டை – சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நிலையில, புதிய தொழிநுட்பத்திற்கமைய உலகில் பல நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது சிறந்ததென அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

இதற்கிணங்க தற்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற அனுமதிப் பத்திரத்திற்குப் பதிலாக, புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை துரிதமாக அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதுவரை சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்குத் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற முறைமையைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.