சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன்

🕔 February 13, 2016
Prince Husain - 01லங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணைகள் நடத்தப்படும்போது, சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலியுறுத்தப்படவில்லை என, ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

ஆயினும், இது தொடர்பான விசாரணையானது பக்கசார்பற்றதும் சுயாதீனமானதுமாக இருக்க வேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

ரொய்டர் செய்தி நிறுவனத்துக்கான கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதுதொடர்பில் ஹுசைன்  மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“விசாரணை நடத்தப்படும் பொறிமுறை பக்கசார்பற்றதாகவும் சுயாதீனமாகவும் அமையும்போது, அதற்கு சகல உதவிகளையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்கும்.

எவ்வாறாயினும் முன்னர் கூறியது போல் இந்த விசாரணைப் பொறிமுறை கலப்பு பொறிமுறையாக இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன்.

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் ஓரளவு முயற்சிகளை எடுத்துள்ளது. இது பாராட்டத்தக்கது.

எனினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மேலும் பலவற்றை செய்ய வேண்டியுள்ளது”

Comments

புதிது பேஸ்புக் பக்கம்