
பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் 16 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) இடம்பெற்றது.
புதிய செயலாளர்கள் பின்வருமாறு;
01. ஜி.பி. சபுதந்திரி – பிரதமரின் செயலாளர்
02. டப்ளியூ.எம்.டி.ஜே. பெனாண்டோ – அமைச்சரவை செயலாளர்
03. சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு
04. கே. எம்.எம். சிறிவர்தன – நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
05. ஜே.எம். திலகா ஜயசுந்தர – கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு
06. ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து – புத்த சாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு
07. பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி – பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு
08. எச்.எஸ்.எஸ். துய்யகொந்த – பாதுகாப்பு அமைச்சு
09. டி.டப்ளியூ.ஆர்.பி. செனவிரத்ன – பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு
10. யூ. ஜி. ரஞ்சித் ஆரியரத்ன – நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு
11. பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால – வலுசக்தி அமைச்சு
12. எஸ். ஆலோக பண்டார – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
13. எஸ்.எம். பியதிஸ்ஸ – தொழில் அமைச்சு
14. ஏ. விமலேந்திரராஜா – வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
15. டி. பி. விக்கிரமசிங்க – விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
16. கே. எம். ஜி.எஸ்.என். களுவெவ – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
17. ஏ. எச்.எம்.யு அருண பண்டார – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
18. அருணி ரணராஜா – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை



