தலைப்புச் செய்திகள்

விஜித முதலிடம், ஹரினி இரண்டாமிடம்: தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்று சாதனை

இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் அமைச்சர் விஜித ஹேரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் 716,715 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

முன்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரினி அமரசூரிய, 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அந்த வகையில், இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எனும் சாதனையை விஜித ஹேரவும், இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எனும் சாதனையை பிரதமர் ஹரினியும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தொடர்பான செய்தி: அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரினி சாதனை