
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியுள்ளது.
தேர்தலின் இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை நேரடியாகவும், 18 ஆசனங்களை தேசியப்பட்டியல் ஊடாகவும் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 35 ஆசனங்களை நேரடியாகவும், 05 ஆசனங்களை தேசியப்பட்டியல் ஊடாகவும் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 08 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
சிலின்டர் சின்னத்தையுடைய புதிய ஜனநாயக முன்னணி 05 ஆசனங்களை வென்றுள்ளது.
பொதுஜன பெரமுன மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேரடியாக 02 ஆசனங்களையும் தேசியப்பட்டில் மூலம் ஒரு ஆசனமும் என 03 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 01 ஆசனத்தைப் பெற்றுள்ளது.
டொக்டர் அர்ச்சுனாவின் ஊசி சின்னத்தைக் கொண்ட சுயேட்சைக் குழு 01 ஆசனத்தைப் பெற்றுள்ளது.
முழு விபரங்களை கீழே காணலாம்;




