தலைப்புச் செய்திகள்

உயர் தர மாணவரைத் தாக்கிய பொலிஸ் சாஜன்ட் இருவர் பணி இடைநிறுத்தம்

சாரதி அனுமதிப் பத்திரத்தை சமர்ப்பிக்காத இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, குடா ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் சாஜன்ட்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி இரண்டு பொலிஸ் சாஜன்ட்களும் – உயர்தர மாணவரான இளைஞரை ஜீப்பில் தள்ளிவிட்டு அவரைத் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இதன்போது அருகில் இருந்தவர்கள் தலையிட்டு இளைஞர்களை அடிக்க வேண்டாம் என்று பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.