நாடாளுமன்றத் தேர்தல்; முதல் முடிவு 10 மணிக்கு: ஆணையாளர் தெரிவிப்பு

🕔 November 14, 2024

– படங்கள்: உமர் அறபாத் (ஏறாவூர்) –

நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடந்து வரும் நிலையில், முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (14) தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்களிப்பு நிலையங்களில் காலை 07 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில மாலை 04 மணிக்கு நிறைவடையும்.

முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி மாலை 05 மணிக்குத் தொடங்கும்.

இந்தத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 01 கோடியே 71 லட்சத்து 40,354 நபர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்