
ஆட்சியை நீடிப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைதான் ஈஸ்டர் தின தாக்குதல் என, புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிய விசாரணையொன்றை முன்னெடுப்பார் எனும் நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு – மாவட்டம் கிரான் பகுதியில் நேற்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த வியடங்களைக் குறிப்பிட்டார்.
”பேராயர் மல்கம் ரஞ்சித் மட்டுமன்றி சர்வதேசங்களாலும் இந்த விடயத்தை ஆராய்ந்து, உண்மையைக் கண்டுபிடிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே கடந்த காத்தில் நடந்த ஈஸ்டர் தாக்குதல், படுகொலைகள், ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நானும் உறுதியாக உள்ளேன்”. என அவர் மேலும் தெரிவித்தார்.



