தலைப்புச் செய்திகள்

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தவர் கைது

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் – மட்டக்குளிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 50 வயதுடைய நபரொருவரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் எல்லைக்குள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரி, சந்தேக நபர் – பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்றை நேற்று (16) மேற்கொண்டுள்ளதோடு, ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக 01 லட்சம் ரூபாயை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, மேற்படி பதில் பொறுப்பதிகாரி – லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, அங்கு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வழங்கும் போது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மட்டுக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.