தலைப்புச் செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பு

நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரி.எம். டில்சான் ஆகியோர் இணைந்து ஐக்கிய ஜனநாயக குரல் எனும் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதாக இன்று (09) அறிவித்துள்ளனர்.

இந்தக் கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்கவும், தேசிய அமைப்பாளராக டில்சானும் பதவி வகிக்கின்றனர்.

இந்தக் கட்சியின் சின்னமாக ஒலி வாங்கி (மைக்) என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையினால், ரஞ்சன் ராமநாயக்க அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்.

பின்னர் அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.