
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.
இருந்தபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துவதில் அவர் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிவதில்லை என, ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன மற்றும் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.



