
உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை (PAYE) குறைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமானம் ஈட்டும் போது இந்த வரியை செலுத்த வேண்டியுள்ளது.
கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்தி 150,000 ரூபாய் சம்பளத்தைப் பெறும் ஒருவரிடம் 3,000 ரூபாய் வரியை அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மொத்த வேதனத்தில் 02 சதவீதம் என்ற அடிப்படையில் இந்த வரி அறவிடப்படுகிறது.
குறித்த வரி தொகையில் 500 ரூபாவை குறைத்து 2,500 ரூபாவை அறவிடுவதற்கு தற்போது அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அதேபோன்று மாதாந்தம் 200,000 ரூபாய் வேதனம் பெறும் ஒருவருக்கு தற்போது 7,000 ரூபாய் வரி அறவிடப்படுகிறது.
அந்த தொகையில் 3,500 ரூபாவை குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாதாந்தம் 450,000 ரூபாய் வேதனம் பெறும் ஒருவருக்கு 76,000 ரூபாய் வரி அறவிடப்படுகிறது.
அந்த தொகையில் 12,500 ரூபாவை குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



