தலைப்புச் செய்திகள்

கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்தல் தொடர்பில், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தகவல்

ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த கடவுச்சீட்டுகள் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 15ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. புதிய கடவுச்சீட்டுகள் கிடைத்த பின்னர் தற்போது நிலவும் நெரிசல் நிலை தவிர்க்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதுவரை புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது நாளாந்தம் 1000 ஆக இருக்குமென, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என, கடந்த மாதம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.

அவசர தேவைகள் உள்ளவர்கள் மட்டுமே கடவுச் சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள திணைக்களம், இந்த முயற்சிக்கான ஒப்பந்தம் சர்வதேச நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தது.