தலைப்புச் செய்திகள்

மண்ணெண்ணெய் தவிர்ந்த எரிபொருள்களின் விலைகள் குறைப்பு

எரிபொருட்களின் விலைகள் இன்று (31) நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன என்று, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீட்டரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 332 ரூபாயாகும்.

95 ரக பெட்ரோல் லீட்டரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 377 ரூபாய்.

டீசல் லீட்டரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 307 ரூபாய்.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 352 ரூபாய்.

மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்தும் லீட்டர் 202 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தத்தின் அளவு – லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் தமது எரிபொருள்களுக்கான விலைகளைத் திருத்தியுள்ளது.