தலைப்புச் செய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம்: ஜனாதிபதி வேட்பாளர் நாமல் தெரிவிப்பு

ஜனாதிபதியாக தான் தெரிவானால், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

“மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாப்போம். எம்மால் முடிந்ததை மட்டும் சொல்வோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வடமாகாண மக்களை ஏமாற்ற மாட்டோம்” எனவும்ட அவர் இதன்போது குறிப்பிட்டார்.

2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.