தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவைர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பல சுயேட்சை வேட்பாளர்கள் – ஒரு பிரதான வேட்பாளருடன் தொடர்புபட்டிருப்பது வெளிப்படையானது என்றும், தேர்தலில் வாக்குகளைப் பாதுகாப்பதற்கு பினாமிகள் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

புதிய விதிமுறைகள் அல்லது அளவுகோல்களின் மூலமே இந்த முறையை மாற்ற முடியும் எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு மாகாணசபை மற்றும் பொதுத் தேர்தல் வரை நீடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் குழுவுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.