தலைப்புச் செய்திகள்

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு: 24 மணித்தியாலத்தில் 17 புகார்கள்

னாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் 17 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 31 முதல் நேற்று (11) வரை மொத்தம் 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று – தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது நிலையில், வேட்புமனுக்கள் இம்மாதம் 15ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.