
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் இவ்வருடம் ஜுலை மாதம் நாட்டுக்கு அனுப்பிய பணத் தொகை 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இது இலங்கைப் பெறுமதியில் 17 ஆயிரத்து 95 கோடி ரூபாய்களாகும்.
இவர்கள் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் நாட்டுக்கு அனுப்பிய தொகை 3.71 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கை நாணயப் பெறுமதியில் இது 01 லட்சத்து 11 ஆயிரத்து 270 கோடி ரூபாய்களாகும்.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் 10.3% அதிகரிப்பைக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



