
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் இன்று (31) கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (31) காலை அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



