
– முனீரா அபூபக்கர் –
மாணவன் எம். எச். ரகீப் அல் ஹாதி எழுதிய ‘விநோதக் கனவு’ நூலின் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை மாலை , கொழும்பு -தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு – பன்னூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தலைமை தாங்கினார் .
நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கலந்து கொண்டார்.
சிறப்பதிதிகளாக ‘தமிழன்’ பத்திரிகை பிரதம ஆசிரியர் சிவராஜா ராமசாமி , ‘விடிவெள்ளி’ பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், ‘கெப்பிட்டல் எப் .எம்’ பணிப்பாளர் ஸியா உல் ஹசன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை உதவிப் பணிப்பாளர் பாத்திமா ரினூசியா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் முதற் பிரதியை புரவலர் டொக்டர். எம்.ஏ.எம். முனீர் பெற்றுக்கொண்டார் .
நன்றியுரையினை இளம் எழுத்தாளர் ரகீப் அல் ஹாதியின் தாயார் எழுத்தாளர் ராஹிலா ஹலாம் நிகழ்த்தினார்.



