பெண்ணொருவரிடமிருந்து 02 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது

🕔 November 12, 2023

பெண்ணொருக்கு தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து, 02 மில்லியன் ரூபாய் பணம் கோரிய குற்றச்சாட்டில், ஹோமாகம – சுவ புபுதுகம கிராம சேவை பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில், ஹோமாகம தெற்கு பிடிபன பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை அநாமதேயமாக அச்சுறுத்தி – பணம் பறிக்க முயன்ற மேற்படி சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

கப்பத் தொகையைப் பெற்றுக்கொள்ளுமமாறு – சந்தேக நபரை ஏமாற்றி வரச் செய்த பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் அவர் 51 வயதுடைய கிராம சேவை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர், பிரதேசத்தில் இதேபோன்ற தொலைபேசி அச்சுறுத்தல் விடுத்து, கப்பம் பெற முயற்சித்துள்ளாரா என்பது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments