தலைப்புச் செய்திகள்

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு புதிய பணி்ப்பாளர் நாயகம் நியமனம்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (11) இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் பல வருட அனுபவமுள்ள அதிகாரியான மதுஷங்க திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, பிரதமர் அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம் மற்றும் நீதியமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.