
– பாறுக் ஷிஹான் –
புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வேண்டாம் எனத் தெரிவித், வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு இன்று (20) வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
அதன் போது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
“பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம்”, “கருத்து சுதந்திரம் பறிபோகும்”, ” இது முற்றுமுழுதாக வேண்டாம்” என, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
இறுதியில் ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்’ என்ற தலைப்பிலான மகஜரை பகிரங்கமாக வாசித்து கோஷம் எழுப்பி போராட்டத்தை நிறைவு செய்தனர்.





